சமூக வலைத்தளங்களை தேர்தல் காலங்களில் முறையாக பாவியுங்கள்-கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர்!!
(பாறுக் ஷிஹான்)
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்க வேண்டும். வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.
கபே அமைப்பின் அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சி வேட்பாளர்கள் சுயேட்சைக்குழுக்கள் ஊடகவியலாளர்கள் பொதுமக்களை தெளிவூட்டும் நிகழ்வும் கபே அமைப்பின் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் காண்காணிப்பாளர்களுக்கான விசேட கலந்துரையாடலும் அம்பாறை மாவட்ட மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ் தலைமையில் இன்று கல்முனை பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன் பின்னர் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த தேர்தல் நிலவரமும் தற்போது இருக்கின்ற நிலவரத்தினையும் பார்க்கும் போது வன்முறையற்ற தேர்தல் கலாச்சாரம் உருவாகின்றது.அதாவது ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற ஒரு சமாதானமான தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் ஒரு கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம்.அதற்கு உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிடலாம். அதேபோல இந்த பொதுத் தேர்தலிலும் இதுவரை பாரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை.இதேவேளை பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்கினை வழங்குகின்றது. இவற்றை நாம் கண்காணிக்கும் போது அபேட்சகர்களுக்கு எதிரான சேறுபூசக்கூடிய இழிவுபடுத்தக்கூடிய போலிப்பிரச்சாரங்கள் நாளுக்குநாள் அதிகரிப்பதனை அவதானிக்க முடிகின்றது.சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை அவதானிக்க முடிகின்றது.இது தவிர கடந்த கால தேர்தலில் காத்தான்குடி பிரதேசத்தில் பாடசாலை சிறுவர்களை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.
கபே அமைப்பு தேர்தல் தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்ட தினத்தில் இருந்து 25 மாவட்டங்களில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றது இதுவரை கபே அமைப்புக்கு பல்வேறு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதிகளை மீறுகின்றது தொடர்பாக அவதானிக்க கூடியதாக உள்ளது.அத்துடன் சமூகவலைத்தளங்களை பாவித்து வேட்பாளர்களை இழிவுபடுத்துகின்ற பொய்யான பிரச்சாரங்களை வீடியோ பதிவுகள் போலி முகநூல் மற்றும் வட்சாப் ஊடாகவும் பதிவுகள் இடப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு பாதகத்தை ஏற்படுத்தக் கூடியதை காணக்கூடியதாக உள்ளது.எனவே அனைத்து அரசியல் கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தக் கூடியவர்களை வரவழைத்து அமைதியான தேர்தலுக்காக ஒத்துழைப்போம் என்ற வகையில் சத்தியபிரமானம் ஒன்றை பெறுகின்றோம்.எனவே சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்க வேண்டும். வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என கபே அமைப்பு கேட்டுக்கொள்கின்றது .

இருந்தபோதும் அரசியல்கட்சியின் வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரிடமும் வேண்டிக்கொள்ளுவது இதுவரை காலப்பகுதியில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறாத நிலையில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையை எவ்வாறு ஈடுபட்டுவந்தீர்களோ அதேபோன்று தேர்தல் தினத்திலும் அதனை தொடர்ந்து வரக்கூடிய 7 நாட்களுக்கு பின்னரான காலப்பகுதிக்குள் சமாதானமான தேர்தலுக்காக ஒன்றுபடவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என்றார்.
குறித்த கலந்துரையாடலில் கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மக்கீன் உடன் கபே அமைப்பின் சட்டத்துறை பொறுப்பாளர் சட்டத்தரணி ஹரீன்தெர வனகள, மாவட்ட இணைப்பாளர் எஸ்.எல். அப்துல் அஸீஸ் ஆகியோர் இணைந்திருந்தனர்.
No comments