சீரற்ற காலநிலையால் சம்மாந்துறை வலய பாடசாலைகளில் சேதம் !
( வி.ரி.சகாதேவராஜா)
சமகால சீரற்ற காலநிலையால் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட பல பாடசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மரங்கள் விழுந்து சேதத்தை விளைவித்திருக்கின்றன .கட்டிடங்களும் சேதம் அடைந்திருக்கின்றன.
மல்வத்தை விபுலானந்தா மத்திய மகா வித்தியாலயம், சம்மாந்துறை அல்முனீர் வித்தியாலயம், மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலயம்,வளத்தாப்பிட்டி தாஹிறா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் மரங்கள் விழுந்து கட்டிடங்கள் சேதமாக இருக்கின்றன.
அதிபர்கள் சேதவிபரம் தொடர்பாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ். மகேந்திரகுமாரிடம் அறிவித்துள்ளார்கள்
No comments