வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு!!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
அது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை நோக்கி நகரக்கூடும் என எதிர்வு கூறியுள்ள அந்த திணைக்களம், நாட்டினுள்ளும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளுக்கும் ‘சிவப்பு’ வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன் காரணமாகக் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடுமையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது
No comments