Vettri

Breaking News

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்பியாக தெரிவான ஆசிரியர் ஆதம்பாவாவுக்கு சாய்ந்தமருதில் வரவேற்பு!!





(  வி.ரி.சகாதேவராஜா)

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கல்முனை சாய்ந்தமருதைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் அபூபக்கர் ஆதம்பாவா தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார் .

அவருக்கு, அவர் பிறந்த சாய்ந்தமருதில் நேற்று இரவு பெரு வரவேற்பளிக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தி தேசிய  பட்டியலில் பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர்  ஆதம்பாவா ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது .

இவரது தெரிவுடன் அம்பாறை மாவட்டத்தில் 3 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகி இருக்கின்றார்கள்.

இம்முறை தேர்தலில் போட்டியிட்டு 23075 வாக்குகளை  பெற்று ஏழாவது நிலையில் பாராளுமன்ற வாய்ப்பை தவற விட்டார். இருந்த போதிலும் அவருக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை அனுர அரசு கட்சி வழங்கியுள்ளது.


கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் உயிரியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வந்தவர்.

சாய்ந்தமருதைச் சேர்ந்த ஆதம்பாவா  சம்மாந்துறையில் திருமணம் முடித்தவர்.

இவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எம்.ஏ.சி.சுலைஹா பீபீயை திருமணம் முடித்தவர் .

இவருக்கு மூன்று பிள்ளைகள் .

மூத்தவர் காலிஸ் இவர் மொரட்டுவ  பல்கலைக்கழகத்தில் நான்காமாண்டு மருத்துவ பீட மாணவனாக இருக்கின்றார்.

 இரண்டாவது பிள்ளை ஹலீசா ஷெயினப் . இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீட மாணவியாக இருக்கின்றார்.
 மூன்றாம் பிள்ளை .ஹம்னா சரசீஸ் மகுமூத் மகளிர் கல்லூரியில் உயர்தர கலைப்பிரிவில் பயின்று கொண்டிருக்கின்றார் .

ஜனாப் ஆதம்பாவா கல்முனை சாஹிறா கல்லூரியில் கல்வி பயின்றவர். பல்கலைக்கழகம் சென்று 1998 இல் 
விஞ்ஞான பட்டதாரியாக மற்றும் விஞ்ஞான முதுமாணி பட்டதாரி ஆக  பல பட்டங்களை பெற்றவர்

1997 களில் ஆதம்பாவா பட்டம் பெற்ற பின்பு வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தை பல மாதங்களாக முன்னெடுத்தவர். காரைதீவு முச்சந்தியில் இரவு பகலாக இருந்து பல நூறு பட்டதாரிகளை இணைத்து தலைமை தாங்கி வழி நடாத்தி போராடி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments