Vettri

Breaking News

நாளை 528 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி ;07 ஆசனங்களுக்காக 640 வேட்பாளர்கள் போட்டி!! அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தெரிவிப்பு!!




( வி.ரி.சகாதேவராஜா)


நாளை(14) வியாழக்கிழமை நடைபெறவிருக்கின்ற இலங்கையின் பத்தாவது பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் 528 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம நேற்று தெரிவித்தார் .


அவர் மேலும் தெரிவிக்கையில்..

அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 528 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதி தேர்தலில்  26 ஆயிரம் ஆக இருந்த தபால் மூல வாக்குகள்  இம்முறை முப்பதாயிரம் ஆக அதிகரித்து இருக்கின்றது.

 அதேபோன்று அம்பாறை ஹார்டி உயர் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கெண்ணும் நிலையங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 56 ஆக இருந்தது. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் அது 68 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது.

அம்பாறை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 21 அரசியல் கட்சிகளினதும் 43 சுயேட்சை குழுக்களினதும் நியமன பத்திரங்கள் ஏற்றுகொள்ளப்பட்டது 

அம்பாறை மாவட்டத்தில்  2024 பாராளுமன்ற  தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்தில் 555432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.பாராளுமன்றம் கலைக்கப்பட்ட  பின்னர் 2024 ஆண்டிற்கான பொதுத்தேர்தல் தேர்தல் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதன் பிரகாரம் 2024.10.04 தொடக்கம் 2024.10.11 வரையான காலப்பகுதியில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 07 ஆசன தெரிவிற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22 உம் சுயேட்சைக்குழுக்கள் 50 இனதும் நியமனப்பத்திரங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன.

அத்துடன் நியமனப்பத்திரங்களை தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியும்  07 சுயேட்சைக்குழுக்களையும் தேர்தல் சட்ட திட்டங்களுக்கமைய  பல்வேறு குறைபாடுகளை கருத்திற் கொண்டு நிராகரித்துள்ளோமா.இதன்படி தற்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 21 உம் சுயேட்சைக்குழுக்கள் 43  இனது நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

மொத்தமாக 64 அரசியல்  கட்சி உட்பட சுயேட்சைக்குழுக்கள் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்  7 ஆசனங்களுக்காக போட்டியிடுகின்றன.

2024 ஆண்டு பொதுத்தேர்தல் அறிவித்த பின்னர் அம்பாறை மாவட்டத்தில் வன்முறையற்றறும் அமைதியானதுமான தேர்தல் செயற்பாடுகள் நடைபெற்று கொண்டு வருகின்றது.பெரியளவிலான வன்முறைகள் எவையும் இடம்பெறவில்லை.எனினும் சிறு சம்பவங்கள் தேர்தல் கண்காணிப்பு ஊடாக கிடைக்கப்பெற்றிருந்தன.அவற்றுக்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. வன்முறையற்ற நீதியான தேர்தல் ஒன்றினை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவும் தெரிவத்தாட்சி அலுவலருமான நானும் பொதுமக்களின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம் என குறிப்பிட்டார்.

No comments