Vettri

Breaking News

2025 பட்ஜட்: ஜனவரி 09 இல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!!




 2025  நிதியாண்டுக்கான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேற்படி சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.


அதை வேளை, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஜனவரி 9ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17 இல், இடம்பெறும் என்றும் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் பெப்ரவரி 27     முதல் மார்ச் 21  வரை இடம் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்

No comments