டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலக்கத் தகட்டை பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பு!!
வாகன இலக்கத் தகட்டைப் பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பணம் செலுத்தி இன்னும் அதைப் பெறவில்லையெனில், டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலக்கத் தகட்டை பெற்றுக்கொள்ளுமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க கேட்டுக்கொண்டுள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தொடர்பான சிக்கல் நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மீண்டும் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர், தற்காலிக இலக்கத் தகடுகளைப் பயன்படுத்தி வீதியில் வாகனங்கள் செலுத்த முடியாதெனவும் தற்காலிக வாகன இலக்கத் தகடுகளை பயன்படுத்தும் வாகனங்கள் மீது, பொலிசாரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்கதெரிவித்தார்.இதன்மூலம் தற்காலிக வாகன இலக்கத் தகடுகளுடன் வீதியில் வாகனங்களை செலுத்துவதற்காக இதுவரை வழங்கப்பட்ட அனுமதி டிசம்பர் 15 ஆம் திகதியுடன் இரத்து செய்யப்படுமெனவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க மேலும் குறிப்பிட்டார்.
No comments