டாக்டர் வரதராஜன் அவர்களினால் பாதணிகள் வழங்கிவைப்பு!!
காரைதீவு கமு/ சண்முகா மகா வித்தியாலய மாணவர்கள் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மாகாண மட்ட ஹாக்கி போட்டியில் வெற்றிபெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்திருந்தார்கள்.
இம் மாணவர்கள் தேசிய மட்டப் போட்டிக்கு செல்வதற்காக பல செல்வந்தர்கள் மற்றும் பல்வேறுபட்ட அமைப்புக்களுடனும் கோரியும் பாதணிகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில் டாக்டர் வரதராஜன் அவர்களினால் அவரது தனிப்பட்ட நிதியிலிருந்து ஒரு இலட்சம் பெறுமதியான 16 பாதணிகள் இம் மாணவர்களிற்கு வழங்கி வைத்திருந்தார்.
இதன்மூலம் தேசிய மட்ட போட்டியில் இம் மாணவர்கள் பாதணிகளை அணிந்து விளையாடுவதற்கான சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்து மாணவர்களை ஊக்கப்படுத்திருந்தார்.
No comments