Vettri

Breaking News

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி!!




 எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.


காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு நேற்று இடம்பெற்றது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் 1 சுயேட்சை குழு ஆகிய போட்டியிட்டன.தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

7 உள்ளூராட்சி பிரிவுகளில் 17,295 வாக்குகளை பெற்று தேசிய மக்கள் சக்தி 15 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகளை பெற்று 6 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 3,597 வாக்குகளை பெற்று, 3 ஆசனங்களை வென்றுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 2,612 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை வென்றது.தேசிய மக்கள் கட்சி 521 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை வென்றுள்ளது.

2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் தொடர்புடைய அடிப்படை உரிமை மனு தொடர்பில் 2024 ஓகஸ்ட் 22 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினை தேர்தல் ஆணைக்குழு கவனத்திற் கொண்டு சட்டபூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ள வகையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை கவனத்திற் கொண்டு பாராளுமன்ற தேர்தல் நிறைவு பெற்றதும் உடனடியாகவே எல்பிட்டிய உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.

எல்பிட்டிய பிரதேச சபையின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் கட்டளைச் சட்டத்தின் (262 ஆம் அத்தியாயத்தின்) 26 ஆம் பிரிவின் கீழ் எல்பிட்டிய பிரதேச சபையின் தவிசாளர், உப தலைவர், மற்றும் உறுப்பினர்கள் தெரிவு செய்வதற்கான தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பொறுப்பேற்றல், கட்டுப்பணம் செலுத்தல் விபரங்களை எல்பிட்டிய பிரதேச சபை தெரிவத்தாட்சி அலுவலகம் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


No comments