அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியில் கணித முகாம்..
அக்கரைப்பற்று திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் (08) இன்று கணித முகாமானது
பாடசாலையின் பிரதி அதிபர் திரு.K.ஜயந்தன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு.K.கமலமோகனதாசன் அவர்களது பங்கேற்புடன், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் விரிவுரையாளர் மற்றும்
திருக்கோவில் கல்வி வலய கணித பாடத்திற்க்கான உதவிக் கல்விப் பணிப்பாளர், பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், கணித பாடத்தினை கற்பிற்க்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments