கருணாமானுக்கு வாக்களித்ததற்கு கடந்த கால தமிழ் அரசியல்வாதிகளே காரணம்!! கி.ஜெயசிறில் தெரிவிப்பு!!
காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடும் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களை ஆதரிக்கும் கூட்டமானது காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் தலைவர் அவர்களின் தலைமையில் இன்று (27/10/2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. இதில் விளையாட்டுகளை சிரேஷ்ட உறுப்பினர்கள் விளையாட்டுக் கழக வீரர்கள் கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் தமிழரசு கட்சியின் வேட்பாளர் கி.ஜெயசிறில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்..
காரைதீவு மண்னின் மைந்தர் அமரத்துவமடைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் அவர்கள் எமக்கு மீனைக் கொடுக்காமல் தூண்டிலை மாத்திரம் தந்து விட்டு சென்றுள்ளார். அதன் அடிப்படையில் நாங்கள் அபிலாசைகளையும் அபிவிருத்திகளையும் அடைந்து வருகின்றோம். எமக்கு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபையை எமது 12 கிராம பிரிவுகளோடு மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி ஆகிய ஊர்களையும் உள்ளடக்கி அமைத்துத் தந்து காரைதீவன் என்று சொல்வதற்கு ஒரு பலத்தை தந்து சென்றுள்ளார். அதற்குப் பிறகு வந்த எந்த ஒரு அம்பாறை மாவட்ட தமிழ் அரசியல்வாதிகளுமே உருப்படியாக நிலையான அபிவிருத்தியோ நிலையான தீர்வோ எமக்கு பெற்றுத் தரவில்லை. பொய் வாக்குறுதிகள் மட்டுமே தந்துள்ளனர். இதன் காரணமாகவே எமது மக்கள் தமிழரசுக் கட்சியில் வெறுப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பானது இணக்க அரசியலை செய்கின்றது. இவர்களுள் சவாரி செய்து கொண்டு சகோதர சமுதாயம்அபிவிருத்தியை பெறுகின்றது. அத்துடன் அரசியல் பயங்கரவாதம் நிர்வாக அடக்குமுறை என்பவற்றை தகர்த்தெறிய வேண்டும் அபிவிருத்திகளை பெற வேண்டும் என்பதற்காக வேண்டி மாத்திரமே எமது அம்பாறை மாவட்ட மக்கள் கருணாமானுக்கு வாக்களித்தார்களே தவிர காசுக்காக வாக்களிக்கவில்லை.
இம்முறை நான் பாராளுமன்றம் சென்று இந்த அரசியல் பயங்கரவாதம் அரசியல் அடக்குமுறைகளை உடைத்தெறிந்து ஊழலற்ற அநுரவின் அரசாங்கத்திற்கு இந்த ஊழலினை எடுத்துக் கூறி உரிமையுடன் கூடிய அபிவிருத்தி பாதையை நிர்வாகத்தினை எடுத்துச் செல்ல இருக்கின்றேன். தொடர்ச்சியாக எதிர்ப்பரசியல் செய்து இன்னும் எமது மாவட்டத்தை படுகுழிக்குள் தள்ளாமல் எமது பலத்தை பயன்படுத்தி ஊழலற்ற அரசாங்கத்துடன் இணைந்து நிர்வாக செயற்பாடுகளில் ஈடுபட உள்ளேன் இன்னமும் தொடர்ச்சியாக எதிர்பு அரசியலைச் செய்தால் எமது இளைஞர்கள் வெறுப்படைந்து மீண்டும் எம்மை வெறுக்கின்ற நிலைமைக்கு வருவார்கள் என்றார். அத்துடன் அநுரவின் அரசாங்கம் JVP யின் நாமம் என்று கூற முடியாதுஎன்றார்.
69 லட்சம் வாக்குகளை அளித்து கோட்டா பாயவை வெற்றி பெறச் செய்த மக்களே அவரை விரட்டியடித்தமைக்கு முள்ளிவாய்க்காலில் இறந்த ஆத்மாக்களே காரணமாகும்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஒன்பது நாடுகளுடன் இணைந்து தோற்கடித்ததை போன்று தமிழ் தேசிய கட்சிகளையும் திட்டம் போட்டு வலுவிழக்கச் செய்துள்ளார். அதன் காரணமாகவே அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கப்படுவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகளை பிரிவடையச் செய்ய அதாவுல்லாவை வெற்றி பெறச் செய்வதற்குமாகவே கருணாமானை அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட செய்வதற்கு கொண்டு வந்தார் என்றார்.
எமது காரைதீவுபிரதேச மக்கள் என்னை தவிசாளராக தெரிவு செய்ததன் பிரதிபலனாக காரைதீவு எல்லைக்குள் அமைந்துள்ள கடற்படையின் பெயர் பலகையில் சாய்ந்தமருது என்று இருந்த பெயரை காரைதீவு என்று மாற்றினேன், அதற்கு அருகில் எல்லையில் உள்ள இடத்தினை மாற்று இனத்தவர்கள் அபகரிக்காமல் இருப்பதற்கு கோயில் அமைத்தேன். எமது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த சடலங்கள் கடலினால் எடுத்துச் செல்லுவதை தடுப்பதற்கு பல கோடி ரூபாய்களை பெற்று கல்வேலி அமைத்தேன். கொரோனா காலங்களில் எமது அரசியல்வாதிகள் குளிரூட்டப்பட்ட அறையிலும் மெத்தைகளிலும் உறங்கும்போது நான் உயிரையும் துச்சம் என நினைத்து அம்பாறை மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் மலையக மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினேன். மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு நான் தலைவர் ஆன பிறகு கும்பாபிஷேகம் நடத்திபத்துஏக்கர்காணியும் பெற்றுக்கொடுத்திருக்கின்றேன் என பல செயற்பாடுகளை செய்து இருக்கின்றேன்.
எனவே காரைதீவு பிரதேசம் பெற்ற அபிவிருத்தி போன்று அம்பாறை மாவட்டமும் பெற்று வெளிச்சமடைவதற்கு வீட்டு சின்னத்திற்கும் ஐந்தாம் இலக்கத்திற்கும் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள். என்று தெரிவித்தார்..
No comments