Vettri

Breaking News

கிழக்கு பல்கலைக்கழகத்தால் நடாத்தப்பட்ட புத்தாக்கப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் ஹக்காம் தங்கப்பதக்கம் வென்றார்!!




 கிழக்கு பல்கலைக்கழகத்தால் நடாத்தப்பட்ட புத்தாக்கப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் ஹக்காம் தங்கப்பதக்கம் வென்றார்


(அஸ்ஹர் இப்றாஹிம்)

கிழக்கு பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட டெக்னோ பாக் (Techno park )புத்தாக்கப் போட்டியில் காத்தான்குடி மத்திய கல்லூரி மாணவர் முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினை வென்றார்.

இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான புத்தாக்க மற்றும் ரோபோ டிக்ஸ் கண்காட்சி போட்டியானது  அண்மையில்  கிழக்குப் பல்கலைக்கழக டெக்னோபாக் வளாகத்தில் இடம்பெற்றது.

 மேற்படி போட்டி நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரி  மாணவர்களில் தரம் 10 ,11 பிரிவில் கல்வி பயிலும் மாணவன் எம்.எப்.எம்.ஹக்காம்    முதலாம் இடத்தினை பெற்று தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டார். 

கலந்து கொண்ட ஏனைய மாணவர்கள் பங்கு பற்றிய மைக்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.



No comments