அம்பாறை மாவட்டத்தை வெத்திலை பெட்டியாக' பாவிக்கும் கலாசாரம் மாற வேண்டும் -முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன்!!
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டத்தை 'வே....வெத்திலை பெட்டியாக' பாவிக்கும் கலாசாரம் இந்த தேர்தலோடு மாற்றமடைய வேண்டும் அல்லது மாறவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் இன்று தனது முகப்புத்தகம் வாயிலாக இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அதில் குறிப்பிட்டுள்ளதாவது
அம்பாறை மாவட்டம் முழுதும் கடந்த சில தினங்களாக சில பயணங்களையும் பல நண்பர்களையும் பயணங்கள் வழியே சந்திக்க நேர்ந்தது.
அதுனூடாக பெற்ற செய்திகளின் அடிப்படையில் சில தகவல்களை உங்களுடன் பகிர்கின்றேன்.
பொது தேர்தலுக்காக பல கட்சிகளும் சுயேட்சைகளும் அம்பாறைக்குள் களமிறக்கப்பட்ட நிலையில் அந்தந்த கட்சிகளுக்காகவும் சுயேட்சைகளுக்காகவும் களமிறக்க ஆள் பிடிக்கும் படலமும் தேடுதல்களும் பரவலாக இடம்பெற்று வருகின்றது.
அம்பாறையில் தமிழர்களுக்கென்று ஒரு ஆசனம் இளவு காத்த கிளியாக காத்திருக்கும் வேளையில் அம்பாறை தமிழ்மக்களின் இருப்பை தக்கவைக்கும் வேலைத்திட்டத்தில் ஒரே சின்னத்தின் கீழ் கொண்டு வருவதற்கான அடிமட்ட எத்தனிப்புகளை பல்வேறு மட்ட சமூக அமைப்புக்கள் செய்தும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் கேள்விக்குறியாக போய் நின்கின்ற இருப்பையும் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்வுகளையும் நாடி பிடித்து அறிந்திருந்தும் தங்களது சுயநலன்களுக்காக ஆளாளுக்கு களத்தில் இறங்கியிருக்கும் நிலையை பார்க்கின்றபோது உண்மையில் பரிதாபமும் கோபமுமே வருகின்றது.
பெண்களின் வாக்குரிமை 52%மாக தேர்தலில் வெற்றியாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக பெண்கள் இருந்தும் கட்சிக்காக உழைத்த பெண் வேட்பாளர்கள் சம அளவில் எந்த கட்சிகளுக்குள்ளும் உள்வாங்கப்படாததும் ஆளுமையான தலைமைத்துவமுள்ள இளைஞர்கள் இனங்காணப்பாடாததும் உண்மையில் வேதனை.
வெறுமனே பொதுவெளியில் சமூக அமைப்புகளா தங்களை வெளிகாட்ட முனையும் பொது அமைப்புக்கள் தங்களுக்குள் பொதுவெளியில் ஒரு கொள்கையும் மறுபுறத்தே தமது கட்சி விசுவாசிகளுக்காக ஒரு கொள்கையும் வைத்து பொதுவெளியில் மக்களை ஏமாற்றி குடைபிடிப்பதுடன் வீட்டிக்குள் இருந்து செய்தி எழுதும் ஊடகவியலாளர்கள் அவர்களுக்கு ஞால்ரா அடிப்பதும் வெட்கப்ட வேண்டிய விடயமாகும்.
எனவே ஐந்துக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு அம்பாறை மாவட்ட தமிழர்களின் பிரதிநிதித்துவத்தையும் அவர்களது இருப்பையும் கேள்விக்குறியாக்கியிருப்பதுடன் பிரதிநிதித்துவ சந்தர்ப்பம் இல்லாமல் போகும் பட்சத்தில் தேர்தலில் குதித்த பல்வேறு தரப்பினரும் இதற்கான தீர்வு என்ன என்பதை மக்களுக்கு உறுதிமொழியாக உங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்குவதும் கட்டாயமானதாகும்.

No comments