மஹிந்த ராஜபக்சவிடமுள்ள மேலதிக வாகனங்களை ஒப்படைக்குமாறு தெரிவிப்பு!!
முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது
1986 பெப்ரவரி 18ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள “1986 இலக்கம் 04 எனும் ஜனாதிபதிகளுக்கு உரித்தான” சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு தற்போது பயன்படுத்தப்படும் மேலதிக வாகனங்களை கையளிக்குமாறு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
1986 இலக்கம் 04 எனும் ஜனாதிபதிகளுக்கு உரித்தான” சட்த்தின் 3 (2) பிரவிற்கு அமைய, அனைத்து முன்னாள் ஜனாதிபதிக்கும் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவிகளுக்கும், அமைச்சரவை அமைச்சருக்கு உரிய காலத்தில் வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் ஏனைய வசதிகளும் வழங்கப்பட வேண்டும்.
அது தவிர, 2010 மே 14ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவினால் அமைச்சர்களின் செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் 3.1 பிரிவிற்கு அமையவும், அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பயன்பாட்டிற்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் உச்சபட்ச உத்தியோகபூர்வ வாகனங்களின் (கார், ஜீப், டபல் கெப்) எண்ணிக்கை 3 ஆகும்.
அதற்கமைய, குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயன்பாட்டிலிருந்த 16 வாகனங்களில் 8 வாகனங்களை அவர் தற்போது கையளித்துள்ளதோடு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் காணப்படுவதாகவும், அராங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments