Vettri

Breaking News

அம்பாறையில் இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனு கையளிப்பு!!




 பாறுக் ஷிஹான்


எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை  மாவட்டத்தில் வீடு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரன்   தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) வேட்புமனு தாக்கல் செய்தனர்.


கட்சியின் வேட்பாளர்கள் அம்பாறை  மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.


தலைமை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையிலான   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்( அக்கரைப்பற்று ) முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( காரைதீவு)குபேந்திரராஜா  ஜெகசுதன்( திருக்கோவில் )

கந்தசாமி இந்துனேஷ்( திருக்கோவில் ) அருள்ஞான மூர்த்தி நிதான்ஞ்சன்( கல்முனை ) பேரின்பநாயகம் ஜீவராஜ்( தம்பிலுவில்)

பாக்கியம் மஞ்சுளா( பெரிய நீலாவணை) ஜெயக்குமார் யசோதரன்( வளத்தாபிட்டி ) கனகரத்தினம் ஜனார்த்தனன்( ஆலையடிவேம்பு )ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.


வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை நண்பகலுடன் நிறைவடைகின்ற நிலையில் இன்றையதினம் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.







No comments