Vettri

Breaking News

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி அமர்வு!!







பாறுக் ஷிஹான்

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் ஆசிரியர்களுக்கு தெளிவூட்டும் 2 நாள் செயலமர்வு நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு  அமைச்சின் மத்தியஸ்த ஆணைக்குழுவானது செடார்(SEDR) நிதிப்பங்களிப்புடன் புதன்கிழமை(23) வியாழக்கிழமை(24) இரு தினங்களில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இச்செயலமர்வினை ஆரம்பித்து வைப்பதற்காக அம்பாறை மாவட்ட  மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.ஜெகராஜன்  மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்   ரி.ஜே அதிசயராஜ் வருகை தந்திருந்ததுடன் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் இருந்து 5 ஆசிரியர்கள் வீதம் 20 ஆசிரியர்களுக்கான செயலமர்வானது  மத்தியஸ்த சபை உத்தியோகத்தர்களான  எம்.அஜூன் ஏ.எல் றினோசா ஐ.எல்.அன்பாஸ் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இச்செயலமர்வானது மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் எஸ்.றிஸ்மினா ஏனைய மத்தியஸ்த  உத்தியோகத்தர்கள் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.

இதன் போது  பாடசாலை மத்தியஸ்தம்  மத்தியஸ்த வரலாறு முரண்பாடு முரண்பாட்டு தீர்வின் முக்கியத்துவம் தொடர்பாடல் கலந்துரையாடல் மத்தியஸ்த படிமுறைகள் பாடசாலை மத்தியஸ்தத்தில் ஆசிரியர்களின் பங்கு என்பன ஆசிரியர்களுக்கு தெளிவூட்டப்பட்டன

No comments