இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை - ஒரு தெளிவுக் கட்டுரை!!
நாடெங்கிலும் உள்ள ஆசிரியர்களின் கற்றல்,-கற்பித்தல் செயற்பாட்டினை வினைத்திறன் மிக்கதாக உருவாக்கும் நோக்குடன் ஆசிரியர்களுக்கு மிக நெருக்கமாக நின்று தொழில்வழிப்படுத்தும் கடமையை மேற்கொள்பவர்களே ஆசிரிய ஆலோசகர்கள் ஆவர். ஆசிரிய ஆலோசகர்கள் முதன்மை ஆசிரியர்கள் என்றும் சில நாடுகளில் அழைக்கப்படுகின்றனர்.
பல வருட காலமாக எதிர்பார்க்கப்பட்டுவந்த இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை( Srilanka Teachers Advisor service) கடந்த வருடம் ஸ்தாபிக்கப்பட்டது.
கல்விப் புலத்தில் இலங்கை கல்வி நிருவாக சேவை இலங்கை கல்வியியலாளர் சேவை இலங்கை அதிபர் சேவை இலங்கை ஆசிரியர் சேவை என்பவற்றுக்கு மேலதிகமாக தற்போது இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவையும் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய சேவை ஆதலால் அச் சேவை தொடர்பாக சில தெளிவுகளை வழங்குவது இக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஆசிரியர் ஆலோசகர் சேவையின் பதவி யானது பொதுச்சேவை ஆணைக்குழுவின்
கல்விச்சேவை குழுவினால்வெளியிடப்பட்ட
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவைப்
பிரமாணக்குறிப்பின் அடிப்படையில்
உருவாக்கப்பட்டதாகும்.
இச்சேவையில் தரம் – II,I வகுப்புக்கள் மட்டுமே உண்டு. தரம்-II இல் இருந்து
தரம்-I க்கு பதவி உயர்வு பெறுவதற்கு
தரம் - II இல் 10 வருட சேவை பூர்த்தியுடன் ஆங்கிலம், சிங்கள மொழிச்சித்தியுடன் கல்வி தொடர்பான ஆய்வுக்கட்டுரை ஒன்றினையும் சமர்ப்பிக்கவேண்டும்.
பிரமாணக்குறிப்பின் படி மொத்த ஆசிரியர் ஆலோசகர்களின் எண்ணிக்கை 4471 ஆகும். இவர்கள் 28 பாடங்களுக்குதரிய ஆலோசகர்களாகும். இதில் தமிழ் மொழி ஆசிரியர் ஆலோசகர்களின் எண்ணிக்கை 1283 ஆகும்.
இச்சேவைக்கான விண்ணப்பம்கோரப்படும்
சமயம் 10 வருட கற்பித்தல் அனுபவத்துடன் இலங்கை ஆசிரியர் சேவை 1 அல்லது 2-1 உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதற்கு பட்டத்திலுள்ள பாடத்துடன் 10 வருடம் உரிய பாடத்தினை கற்பித்த அனுபவத்தினை கொண்டிருக்க வேண்டும்.
இச்சேவைக்குரியவர்களை தெரிவுசெய்யும்
போட்டிப் பரீட்சை இலங்கை பரீட்சைத்
திணைக்களத்தினால் தேசியரீதியாக நடாப்படும்.
50 வயதை தாண்டியவர்கள் விண்ணப்பிக்க முடியாது. இச்சேவையைச் சேர்ந்தவர்கள் கோட்டக் கல்வி அலுவலகம் அல்லதுவலயக்
கல்விஅலுவலகங்களில்கடமையாற்றலா ம்.
இவர்களின் பாடசாலை தரிசிப்பு மற்றும் ஆற்றிய கடமையினை பதிவிடுவதற்காக ஒவ்வொரு பாடசாலையிலும். 'கல்வி அபிவிருத்தி பதிவுகுறிப்பு'எனும்தலைப்பில்
இச்சேவையைச் சேர்ந்தவர்களுக்கான குறிப்பு புத்தகம் தணியாக பேணப்படல் வேண்டும்.
இவ்வாவணம் இவர்களுடைய வரவை உறுதிப்படுத்தும் ஆவணம் என்பதனால் அதிபர்கள் இவர்களின் வரவினை தனியாக உறுதிப்படுத்தவேண்டிய அவசியமில்லை.
வரவுச்சான்றிதழ் வழங்க வேண்டியதும்
இல்லை.
மாதம் ஒன்றுக்கு 10 நாட்கள் பாடசாலை தரிசிப்பினைமேற்கொள்ளலாம். ஏனைய
நாட்களில் அலுவலக கடமையாகும்.
பாடசாலை தவணை விடுமுறைக்காலத்தில
அலுவலகத்திற்கு சமூமளிக்கவேண்டும். பாடசாலை தரிசிப்புக்கு கொடுப்பனவுண்டு.
இச்சேவையைச் சேர்ந்தவர்கள் பாடசாலை
மேற்பார்வை மற்றும் நிருவாகக் கடமை
களில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள்.
வி.ரி.சகாதேவராஜா
(Rtd. ADE)
காரைதீவு நிருபர்
இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை - ஒரு தெளிவுக் கட்டுரை!!
Reviewed by Thanoshan
on
10/29/2024 10:28:00 AM
Rating: 5
No comments