Vettri

Breaking News

ஆசிரியர்களுக்கான உள சமூக சுகாதாரத்தை மேம்படுத்தல் விழிப்புணர்வு கருத்தரங்கு!!






செ.துஜியந்தன்

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில்  பாடசாலைகளின் உள சமூக சுகாதாரத்தை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தலைமையில் வலயக் கல்விப் பணிமனையின் ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு தாய், சேய்  நல சுகாதார  வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் , மாவட்ட மனநல மைய வைத்திய அதிகாரி டாக்டர் டான் செளந்தரராஜா,  ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ரி.திலக்சன், மேற்பார்வை சுகாதார பரிசோதகர்களான இன்பராசா, யோகேஸ்வரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித் ஆசிரிய ஆலோசகர்களான பா.துஷ்ஷயந்தன், சோ.ஜெயரெத்தினம் உட்பட  பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட இடைநிலைப்பாடசாலை ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர் .

இங்கு மாணவர்களின் கட்டிளமைப்பருவத்தினரின் உள சமூக விருத்தி, வன்கொடுமைகளை தடுத்தல், உடல் பருமனால் ஏற்படும் தாக்கம், போதைப் பொருள் பாவனையின் விளைவு, தகவல் தொழில்நுட்ப ஊடகங்களின் பாதிப்பு ஆகியன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments