Vettri

Breaking News

வரி செலுத்தாதவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!




 இந்த ஆண்டு இறுதிக்குள் செலுத்த வேண்டிய நிலுவைத் வரித் தொகையை வசூலிக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரி செலுத்தத் தவறியவர்கள் இருந்தால், அவர்களது வங்கிக் கணக்குகளை முடக்கவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரம் உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, உள்நாட்டு இறைவரி திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் என். எம். என். எஸ். பி. திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனினும், வரி வசூலிக்க வரும் அதிகாரிகளின் அடையாளத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், நிலுவைத் தொகையை காசோலையாகவோ, பணமாகவோ வழங்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.


No comments