நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை!!
இன்றையதினம் (07) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடை அயன ஒருங்கல் வலயம் (Intertropical Convergence Zone) (வட அரைக்கோளம் மற்றும் தென் அரைக்கோளம் ஆகியவற்றிலிருந்து வரும் காற்று சங்கமிக்கும் வலயம்) நாட்டின் வானிலையில் செல்வாக்கு செலுத்தியுள்ளதால் இந்நிலைமை ஏற்பட்டுள்தாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமாக பலத்த காற்று, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்
No comments