கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது!!
செ.துஜியந்தன்
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை 2024 ஆம் ஆண்டுக்குரிய ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது பெற்றுள்ளது. இவ் விருதினை பெற்றுக் கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர்கள், பிரதேச செயலாளர், தாதி உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள், பாடசாலை அதிபர்கள், வெளியில் இருந்து ஆதரவு வழங்கிய சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் வைத்திய சாலை பணிப்பாளர் டாக்டர் ஏ.பி.ஆர், எஸ்.சந்திரசேன தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் கலந்து கொண்டார். அத்துடன் சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments