தபால் வாக்குகளை செலுத்துவதற்கான திகதிகள் அறிவிப்பு!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் வாக்குகளை செலுத்துவதற்கான திகதிகளை இலங்கை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 30, நவம்பர் 01 – 04 ஆம் திகதிகளில் அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, மேற்குறிப்பிட்ட திகதிகளில் தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்த முடியாதவர்கள் நவம்பர் 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் அதனை மேற்கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments