போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் கைது!!
கல்கிஸ்ஸ - ஒடியன் சந்தி பகுதியில் கல்கிஸ்ஸ பிரிவு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 1,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments