Vettri

Breaking News

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை!!




 நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதன்படி, வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 
 
இதற்கமைய,  ஊவா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
 
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் ஆபத்துகளைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டளவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது

No comments