Vettri

Breaking News

காத்தான்குடி நகர சபையின் நீண்ட காலத் தேவையாக காணப்பட்ட தீ விபத்து மீட்பு பிரிவுக்கான தீயணைப்பு வாகனம் ஒன்றினை கொழும்பு மாநகர சபை அன்பளிப்பு செய்துள்ளது.






(அஸ்ஹர் இப்றாஹிம்)


கொழும்பில் கடந்த வியாளன் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணீ ஜயவர்தன அவர்களால் காத்தான்குடி நகர சபை கணக்காளர் அஹ்ஸன் தலைமையிலான குழுவினரிடம் கையளிக்கப்பட்டது.


காத்தான்குடி நகரின் நீண்டகால தேவையொன்று நிறைவேறும் இச் சந்தர்ப்பத்துக்காக கடந்த நகரசபை பதவிக்காலத்தில் பாடுபட்ட  முன்னாள் நகர முதல்வர் உள்ளிட்ட சபை உறுப்பினர்களும்  இதற்காக பல வழிகளிலும் முயற்சித்த அனைவரும் சபையின் செயலாளர் றிப்கா ஷபீன்  நன்றி தெரிவித்துள்ளார்


No comments