Vettri

Breaking News

சாய்ந்தமருதை ஊடறுத்துச் செல்லும் கரைவாகு ஆற்றில் நிறைந்துள்ள ஆற்றுவாழையினால் மக்கள் பெரும் சிரமம்!!





(அஸ்ஹர் இப்றாஹிம்)


சாய்ந்தமருது கரைவாகு ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆற்றுவாழையினால் (ஐக்கோணியா) பலவிதமான பிரச்சினைகளை பிரதேச மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். 

ஆற்றுவாழை வளர்ந்து காணப்படுவதால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன்,  தொற்று நோய்கள் பெருக்குவதற்கான சூழலும் உருவாகி வருகின்றது.இரவு வேளைகளில் பிரதேசமெங்கும் ஒருவகையான துர்நாற்றம் வீசுவதால் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு சுகாதார சீர்கேடுகள் இடம்பெறுவதற்கும் ஏதுவாகிறது.
நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக விஷனம் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆற்றூவாழைகளுக்கிடையில் முதலைகள் மற்றும் பாம்புகளின் பெருக்கம் அதிகரித்து ஆற்றில் நீர் நிறைந்த வேளைகளிலும் வெள்ள காலங்களிலும் அருகிலுள்ள குடியிருப்புகளுக்குள் பிரவேசிப்பதால் சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் தூக்கமின்றி விடியும் வரை நித்திரையின்றி இரவைக் கழிக்க வேண்டியுள்ளது. 
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு பிரதேசவாசிகள் கேட்டுள்ளனர். 

No comments