Vettri

Breaking News

சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்ய புதிய நிறுவனம் ஸ்தாபிப்பு!!




 அரசியல்வாதிகள் அல்லது பிற நபர்களால் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் உடைமைகளை பறிமுதல் செய்வதற்காக புதிய அரச நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி சார்பாக களுத்துறை மாவட்டத்தில் போட்டியிடும் சட்டத்தரணி நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்தார்.

‘சொத்துக்கள் மறுசீரமைப்பு நிறுவனம்’ அமைப்பது தொடர்பாக வெளியிட்டுள்ள கருத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார். சொத்து மறுசீரமைப்பு அமைப்பு என்றழைக்கப்படும் இந்த அமைப்பு உலகின் பல வளர்ந்த நாடுகளில் செயற்படும் ஒரு அமைப்பாகும்.வெளிநாட்டில் அல்லது நாட்டுக்குள் இடம்பெறும் பணமோசடி மற்றும் பிற சொத்துக்களிலிருந்து பெறப்பட்ட முறைக்கேடான ஆதாயங்கள் அல்லது பணத்தைக் கண்டறிந்து, அதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

குறிப்பாக, சட்டவிரோத கறுப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் தொடர்பாக அரசாங்கத்துக்கு ஏற்கனவே கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பல இரகசிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments