Vettri

Breaking News

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஜீப் வண்டியை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டது!!




 சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப் வண்டியொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த ஜீப் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்படி ஆணைக்குழுவின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி கடந்த 18ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஜீப் வண்டியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு தொழிலதிபருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அந்த உத்தரவுகளை மீறியதன் காரணமாக பதுளை நெலும்கம பிரதேசத்தில் உள்ள தொழிலதிபருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வுப் பிரிவினர் ஜீப்பை கைப்பற்றியுள்ளனர்

No comments