Vettri

Breaking News

சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் விவேகானந்தா லியோ அணி சாம்பியன்!!




 காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகம் தனது 37வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாகவும் 

சிறுவர் தினத்தை சிறப்பிக்கும் முகமாகவும் காரைதீவு  விவேகானந்தா விளையாட்டு கழகத்தில் புதிதாக இணைந்து கொண்ட 50 உறுப்பினர்களுக்கான சினேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது 

இந்த நிகழ்வு கழகத்தின் கௌரவ தலைவர் 

திரு V . தயாபரன் தலைமையில் இடம்பெற்றது 

இந்த நிகழ்வுக்கு அதிதிகளாக விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் கௌரவ செயலாளர்  

K . உமாரமணன் மற்றும் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் 

கிரிக்கெட்துறை முகாமையாளர்  

M . ரமணிதரன் மற்றும் விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் 

முன்னாள் கிரிக்கெட்துறை முகாமையாளர் 

A . விசிகரன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள் புதிதாக இணைந்து கொண்ட கழக உறுப்பினர்கள் 

மூன்று அணிகளாக பிரிக்கப்பட்டு 

கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்றிருந்தது இறுதியில் விவேகானந்தா லியோ அணியினர் சம்பியன் கிண்ணத்தினை சுவீகரித்திருந்தனர் போட்டியில் பங்கு பற்றிய வீரர்களுக்கான ஆட்டநாயகன் விருது, சிறந்த துடுப்பாட்டருக்கான விருது 

சிறந்த பந்துவீச்சாளர்க்கான விருது, 

சிறந்த சகலதுறை ஆட்டக்காரர்க்கான கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டதோடு சம்பியன் பட்டத்தினை தனதாக்கி கொண்ட விவேகானந்தா லியோ அணியினருக்கு வெற்றி கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.



















No comments