கல்முனை பிரதேச மூத்த மீனவர்கள் கெளரவிப்பு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை முஹியித்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப் ஆகியவற்றின் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் பல காலமாக மீனவர்களாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற கல்முனை பிரதேசத்தின் மூத்த மீனவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் விஷேட நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்காவின் வருடாந்த கொடியேற்று நிகழ்வு மற்றும் அதன் வளர்ச்சியில் அதனை சுற்றி வாழ்கின்ற மீனவர் சமூகத்தின் பங்கு அளப்பெரியதாகும்.
அந்த வகையில் ஆழ்கடல் மற்றும் கரைவலை மீனவர்களில் தண்டையல் தரத்தில் பணிபுரிந்து ஓய்வடைந்த கல்முனை பிரதேசத்தின் மூத்த மீனவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை எண்கோணமண்டபத்தில் இடம்பெற்றது.
No comments