விவசாயிகளின் உர மானியத்தை வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை!!
புதிய அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள உர மானியம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்கிரமசிங்க இது தொடர்பான பணம் நேற்று முன்தினம் திறைசேரியிலிருந்து பெறப்பட்டதாக தெரிவித்தார். இதேவேளை, மீனவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மானியம், ஒரு நாள் வள்ளங்களுக்காக நாளொன்றுக்கு 15 லீற்றரும் கடலில் பல நாள் தொழிலில் ஈடுபடும் வள்ளங்களுக்கு அதிகபட்ச எரிபொருள் கொள்ளளவு அளவில் தனித்தனியாகவும் வழங்கப்படும் என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.
No comments