Vettri

Breaking News

களுவாஞ்சிக்குடியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்!!






செ.துஜியந்தன்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் தொற்றா நோய் பிராந்திய பிரிவு, இலங்கை புற்றுநோய் சங்கம், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு, ஆதாரவைத்தியசாலை ஆகியன இணைந்து மார்பக புற்றுநோய் தொடர்பாக பொதுமக்களை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று (10) களுவாஞ்சிக்குடி யில் நடைபெற்றது.

 மார்பக புற்றுநோயை கண்டறிவோம், சிகிச்சை செய்வோம், தோற்கடிப்போம் எனும் தொனிப்பொருளில் இவ் விழிப்புணர்வு ஊர்வலம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளர் எந்திரி என்.சிவலிங்கம் கலந்து கொண்டார். கெளரவ அதிதிகளாக மட்டு தொற்றா நோய் பிரிவு பொறுப்பதிகாரி டாக்டர் இ.உதயகுமார், பேராசிரியர் வைத்திய கலாநிதி டாக்டர் இ.கருணாகரன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன், வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கே.புவனேந்திரநாதன் உட்பட களுவாஞ்சிக்குடி சுதார வைத்திய அதிகாரி அலுவலகம்,  போரதீவுபற்று வைத்திய அதிகாரி அலுவலகம், பட்டிப்பளை வைத்திய அதிகாரி அலுவலகம் , வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுகள், இலங்கை புற்றுநோய் சங்க உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் எனப் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை முன்றலில் ஆரம்பித்த விழிப்புணர்வு ஊர்வலம் பிரதான வீதி ,  களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையம், பட்டிருப்பு சந்தி, களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தை ஊடாக வைத்தியசாலையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மார்பக புற்றுநோயை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பதாதைகளை தாங்கியவாறு, துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

வைத்தியசாலை முன்றலில் மார்பக புற்றுநோய் தொடர்பாக வைத்திய அதிகாரிகளினால் பொதுமக்களை அறிவுறுத்தும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments