ஊழல் மற்றும் மோசடி தொடர்பான 400 கோப்புகள் திறக்கப்படும் - ஜனாதிபதி தெரிவிப்பு!!
ஊழல் மற்றும் மோசடி தொடர்பான 400 கோப்புகள் சட்டமா அதிபரிடம் இருப்பதாகவும், அவை அனைத்தும் சட்ட நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்றும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தங்காலையில் நடைபெற்ற தமது கட்சிக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டரீதியாகவும், முறையாகவும் இந்த நடவடிக்கைகளை எடுக்கும்போது அரசாங்கம் ஒருபோதும் சளைத்து பின்வாங்காது என அவர் மேலும் கூறினார்
No comments