Vettri

Breaking News

39 ஆம் கிராமம் செந்நெறி வித்தியாலயம் காட்டுயானைகளால் சேதம்!!







செ.துஜியந்தன்

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட போரதீவுப்பற்று மண்டூர் 39 ஆம் கிராமம் செந்நெறி வித்தியாலயம் இன்று (14) அதிகாலை காட்டுயானைகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை நேரத்தில் பாடசாலை வளாகத்தில் உள் நுழைந்த காட்டுயானைகள் பாடசாலை சுற்று வேலி, வகுப்பறை கட்டிடம், பாடசாலை மேற்கூரை ஆகியவற்றை சேதப்படுத்தியுள்ளது  அதிகஸ்டப்பிரதேச பாடசாலையான இவ் வித்தியாலயத்தில் 148 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.  வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் இப் பாடசாலையானது அடிக்கடி காட்டு யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றது. மிகுந்த கஷ்டங்களுக்கு மத்தியிலே கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இப் பாடசாலையின் பெளதீக வளப்பற்றாக்குறையை தீர்த்து வைப்பதற்கு பிரதேச அரசியல பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments