வெள்ள அனர்த்தத்தில் 3பேர் உயிரிழப்பு!!
வெள்ளம் காரணமாக களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 11ஆம் திகதி பாணந்துறை - அங்குருவத்தோட்ட வீதியில் பயணித்த ஹல்தொட்ட போதிக்கு அருகில் நீர் நிறைந்த வயல்வெளியில் தவறி விழுந்ததில் 48 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த 10ஆம் திகதி கால்வாயில் தவறி விழுந்து காணாமல் போனவரின் சடலம் 12ஆம் திகதி காலை கடுவெல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெலிஹிட கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மழை நிலை மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் தற்போது படிப்படியாக குறைந்து வரும் வெள்ள நிலை மீண்டும் அதிகரிக்கலாம் என நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வரா தெரிவித்தார்.
அதிக மழையில், கம்பஹா, கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உடனடியாக நகர வெள்ளம் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
No comments