கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு 15 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கி வைப்பு!!
செ.துஜியந்தன்
அவுஸ்திரேலியாவின் வன்னி ஹோப் லிமிடெட் நிறுவனத்தின் உதவியுடன் வைத்தியசாலை சேவை சபையினால் 15 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது. இவ் நன்கொடையை
வைத்தியசாலை சேவை சபையின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய ராஜவல்லே சுபுதி தேரர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ரங்க சந்திரசேன விடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.
இதனை அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இருந்து தனிப்பட்ட முறையில் சேகரித்து வழங்குவதில் வைத்தியசாலை சேவை சபையின் பணிப்பாளர் வணக்கத்துக்குரிய ரஜவல்லே சுபுதி தேரர் ஈடுபட்டிருந்தார் . அத்துடன் அவுஸ்திரேலியா வன்னி ஹோப் லிமிடெட் பணிப்பாளர் ரஞ்சன் சிவஞானசுந்தரம் இதற்கான கப்பல் போக்குவரத்துக் கட்டணங்கள் மற்றும் உரிய வரிகளைச் செலுத்துவதில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டிருந்தார்
கல்முனை (வடக்கு) ஆதார வைத்தியசாலைக்கு இந் நன்கொடை மூலம் 03 ICU படுக்கைகள், 02 மின்சார அனுசரிப்பு பிரசவ படுக்கைகள், 02 டயாலிசிஸ் படுக்கைகள், சிசு சூடு மற்றும் சிசு இன்குபேட்டர் ஆகியவை கிடைக்கப்பெற்றுள்ளன. இதன் மூலம் கல்முனை பிரதேச மக்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்கமுடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வைத்தியசாலை சேவை சபையின் வணக்கத்திற்குரிய ஒமரே சுதாசிதேரர், வைத்தியசாலை சேவை சபையின் செயலாளர் வசந்த அமரதிவாகர மற்றும் வைத்தியசாலை சேவை சபையின் இஸ்ஸிர உதயந்த வன்னி ஹோப் அறக்கட்டளையின் பிராந்திய முகாமையாளர் கணபதிப்பிள்ளை தவசீலன் மற்றும் வன்னி ஹோப் அறக்கட்டளையின் திருமதி ஷாலினி டாக்டர் எஸ்.ராஜேந்திரன், டாக்டர் ரன்சிறி , டாக்டர் சமீம் டாக்டர் Sr.S.N.றோசாந், டாக்டர் சாருலதன் டாக்டர் கணேஸ்வரன் உட்பட வைத்திய சாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
No comments