14 மாணவிகளை தவறாக வீடியோ எடுத்த நபர் கைது!!
பல்கலைக்கழக மாணவிகள் 14 பேரை நிர்வாண வீடியோ எடுத்த 36 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மில்லெனிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
ஹொரண ஸ்ரீபாலி பல்கலைக்கழகத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைகக்கழக மாணவிகளின் குளியறையில் இருந்து சந்தேக நபர் வீடியோ படமெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாய் கூடு செய்வதற்காக வீட்டிற்கு வந்த சந்தேக நபர் குளியறையிலிருந்து துவாரமொன்றின் வழியாக கையடக்க தொலைபேசியை வைத்து வீடியோ படமெடுத்தமை மாணவி ஒருவரினால் அடையாளம் காணப்பட்டு அங்கிருந்தவர்களுக்கு அது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை சோதனை செய்த போது அதில் மேலும் பல மாணவிகளின் நிர்வாண வீடியோக்கள் இருந்தமை தெரியவந்தது. அவற்றை கையடக்க தொலைபேசியிலிருந்து அழிப்பதற்கு மாணவிகள் நடவடிக்கை எடுத்ததுடன் சந்தேக நபரை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
No comments