122 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியது!!
2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்காக 122 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
குறித்த இரண்டு மாவட்டங்களிலும், 15 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது
No comments