Vettri

Breaking News

பொத்துவில் ஆதார வைத்தியசலையில் அறுகம்பே மற்றும் உல்லை பிரதேசங்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளின் வசதி கருதி கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவு (Paying ward )அமைப்பது தொடர்பாக உயர்மட்டக் கலந்துரையாடல்






(அஸ்ஹர்  இப்றாஹிம்)

பொத்துவில் ஆதார வைத்தியசலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying ward) வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. அதுதொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று கடந்த  புதன்கிழமை (04) பொத்துவில் ஆதார வைத்தியசலையில் இடம்பெற்றது.





சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள், இலங்கை சுற்றுலா அதிகார சபையின் உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மெலிண்டன் கொஸ்தா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர்  திருமதி சகீலா இஸ்ஸடீன், ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகளான டொக்டர் நித்தின் ரணவக்க, டொக்டர் ஏ.பி.மசூத், பிராந்திய கண்கானிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பொறியியலாளர் ஏ.எம்.ஹக்கீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து உயர்மட்ட குழுவினர் கட்டணம் செலுத்தும் சிகிச்சைப்பிரிவு (Paying Ward) அமையவுள்ள இடங்களையும் பார்வையிட்டனர். 

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில்கட்டணம் செலுத்தும்சிகிச்சை (Paying Ward) வசதிகள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அறுகம்பே பிரதேசத்துக்கு வருகைதரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பெரிதும் நன்மையடைவதுடன், எமது நாட்டுக்கும் பெரும் வருமானத்தை ஈட்டிக்கொடுக்கின்ற ஒரு நிறுவனமாகவும் பொத்துவில் வைத்தியசாலை திகழும்.

இலங்கை சுற்றுலா அதிகார சபை குறித்த கட்டணம் செலுத்தும் சிகிச்சைப் பிரிவு  வசதியினை ஏற்படுத்துவதற்கு நிதியுதவி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments