Vettri

Breaking News

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் முன்மாதிரியான மாணவர்களுக்கு திறமைக்கான சான்றிதழ் ("Excellent Certificate" ) வழங்கும் நிகழ்வு"






(அஸ்ஹர் இப்றாஹிம்)

அந்த வகையில் திறமைக்காக சான்றிதழை  பெற்ற மாணவர்கள் குறித்த தவணையில்   90%  வரவினையும் , பரீட்சையில்  சராசரி  80  இற்கும் அதிகமான புள்ளிகளையும் , அனைத்து பாடங்களிலும் 75 புள்ளிகளையும்,
ஆகக்குறைந்தது ஒரு விளையாட்டு செயற்பாட்டிலாவது ஈடுபட்டிருந்தமை,
ஆகக்குறைந்தது ஒரு கழகத்திலாவது அங்கத்தவராக இருந்தமை, 
எந்த விதமான ஒழுக்காற்று நடவடிக்கைக்கும் உட்படாதவராக இருந்திருத்தல் என்பன கணிப்பிடப்பட்டன. 






இந்த நிகழ்வின் நோக்கம் ஆளுமையுள்ள சிறந்த பிரஜைகளை பாடசாலைகளில் உருவாக்குவதாகும். இச் செயற்பாடானது மாணவர்களை ஊக்கப்படுத்தும். எனவே இதனூடாக பாடசாலையில் பல்வேறு விருப்பத்துக்குரிய மாற்றங்களை அடைய முடியும் என அதிபர் தெரிவித்தார. 

மிகவும் சிறப்பாக நடைபெற்ற இந்த கௌரவிக்கும் நிகழ்வில் மாணவர்களினது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

No comments