Vettri

Breaking News

கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை பொலிவிழந்து குப்பைகளின் கூடாரமாக மாறியிருப்பதற்கு யார் காரணம் ?







(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


வைத்தியசாலை என்பது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் இடமாக மட்டும் இருக்கக் கூடாது.அரசியல் வாதிகளின் பிடியிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும். வைத்தியசாலை சூழல் அழகாகவும் ரம்மியமாகவும் நோயாளிகளின் மன நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேணப்பட வேண்டும்.

கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை வளாகம் பழைய கட்டிட இடிபாடுகள் குவிந்த வண்ணம்,தகடுகள்,கம்பிகள் என்பவற்றுடன்  கடந்த பல வருடங்களாக காணப்படுவது அனைவரினதும் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றது.

கட்டிட இடிபாடுகளுக்குள் விசப் பாம்புகள் குடியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலை,சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை, காரைதீவு பிரதேச வைத்தியசாலை, அக்கரைப்பற்றூ ஆதார வைத்தியசாலை ,சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை என்பன மிகவும்அழகாக இருப்பதுடன் அதன் சூழல் நோயாளிகளுக்கு ரம்மியமாகவும் அமைந்திருப்பது பாராட்டத்தக்க விடயமாகும்.

இதைத் தவிர அம்பாறை பொது வைத்தியசாலை ஏனைய வைத்தியசாலைகளுக்கு ஒரு முன் மாதிரியாக அமைந்துள்ளது.

பாரிய யுத்தம் நடந்த ஒரு இடத்தில் வைத்தியசாலை அமைந்திருப்பது போல் காட்சியளிக்கும் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலை இனிமேலாவது புத்தொளி பெறுமா????

No comments