Vettri

Breaking News

மட்டக்களப்பில் விஷேட தேவையுடையுருக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு







(அஸ்ஹர் இப்றாஹிம்)

மட்டக்களப்பில் விஷேட தேவையுடையோருக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும்,மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரயுமான  திருமதி ஜஸ்டினா முரளீதரன் தலைமையில் இடம்பெற்றது.



உதவி தேர்தல் ஆணையாளர் எம்.ஏ.எம்.சுபியானின் ஒழுங்கமைப்பில் விஷேட தேவையுடையவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கிவைக்கப்பட்டன. 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விஷேட தேவையுடையவர்கள் தமது  வாக்குகளை பதிவு செய்து கொள்வதற்காக முதன் முறையாக இவ் அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றது. 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந், மாவட்ட சமூக சேவை உத்தியோஸ்தர் திருமதி எஸ்.கோணேஸ்வரன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments