Vettri

Breaking News

தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு!!




 இலங்கை தமிழரசு கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக இன்று தெரிவித்துள்ளது.

வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெற்ற நிலையில் கூட்டத்தின் எடுக்கப்பட்ட தீர்மானங்களை எம்.எ சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
 
இதன் பிரகாரம் இன்றைய கூட்டத்தில் அரியநேந்திரனுக்கு ஆதரவு அளிப்பதில்லை என்றும் தமது கட்சியைச் சேர்ந்த அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதன் காரணமாக அதிலிருந்து விலக வேண்டும் என்றும் தீர்மானித்ததோடு இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் மூன்று தீர்மானங்களை இன்று நிறைவேற்றியுள்ளது.

No comments