Vettri

Breaking News

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில்சம்பியனானது யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆண்கள் அணி!




 இலங்கையிலுள்ள பல்கலைக் கழகங்களுக்கிடையிலான பெரு விளையாட்டுக்களுள் ஒன்றான ஆண்களுக்கிடையிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆண்கள் அணி  சம்பியனாகவும், பெண்களுக்கான  கூடைப்பந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.


(அஸ்ஹர் இப்றாஹிம்)

பேரதெனிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற  ஆண்களுக்கான கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஸ்ரீ ஜயவர்த்தன பல்கலைக்கழக்தை 44:47  என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி கொண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் சம்பியனானது.

பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பெண்கள் அணி  48:38 என்ற புள்ளி அடிப்படையில் சப்ரகமுவ பல்கலைக்கழக பெண்கள் அணியுடன்  தோல்வியுற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.


No comments