Vettri

Breaking News

அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் பகலிலும் நடமாடும் காட்டு யானைகளால் பொதுமக்களுக்கு அசெளகரியம்






எந்ந நேரமும் எதுவும் நடக்கலாம் என உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீதியில் பயணிக்கும் மக்கள்

(அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு, நிந்தவூர்  மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களில் மாலையிலும் இரவு வேளையிலும் மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த காட்டு யானைகள் தற்போது  பகல் வேளையிலும் மக்கள் நடமாட்டமுள்ள இடங்களுக்கு சர்வ சாதாரணமாக நடமாட ஆரம்பித்துள்ளன.





கூட்டமாகவும் தனியாகவும் கிராமங்களுக்குள் உட்புகும் காட்டு யானைகள் குடியிருப்புகள்  , மதில்கள் மற்றும் பயன்தரும் தென்னை, ,வாழை மரங்களுக்கும் பலத்த சேதத்தை உண்டு பண்ணுகின்றன.

அண்மைக்காலமாக காட்டு யானையின் தாக்கத்தினால் இப்பிரதேசங்களில்பல உயிர்களும் காவு கொள்ளப்பட்டுள்ளன.


No comments