ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம்!!
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (02) வெளியானது.
இது குறித்த நிகழ்வு கொழும்பில் இன்று (02) காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது.
ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை தனது விஞ்ஞாபனத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, திலித் ஜயவீர ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளனர்.
தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தனது தேர்தல் விஞ்ஞானத்தை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தாக்கது.
No comments