மட்டக்களப்பு,புதுக்குடியிருப்பு கண்ணகி மகாவித்தியாலய மாணவர்களுக்கு மட்டக்களப்பு விவேகானந்த தொழில் நுட்பவியல் கல்லூரியில் வாழ்கைத் திறன் பயிற்சி பட்டறையொன்று அண்மையில் நடைபெற்றது.
இப் பயிற்சி பட்டறை நேர்மறை எண்ணங்கள் மற்றும் ஊக்கப்படுத்தல் ஆகிய தலைப்பின் கீழ் வழங்கப்பட்டது.
மேலும் விவேகானந்தா கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம் பெற்ற இந் நிகழ்வில் அதிபர் மற்றும் விவேகானந்த சமூதாய அறக்கட்டளையின் முகாமையாளர் மற்றும் கல்லூரி சேவையாளர்கள் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.
செயற்பாடு மற்றும் விளையாட்டுக்கள் மூலம் வாழ்க்கைத்திறன் பயிற்சி வழங்கப்பட்டமை முக்கியம்சமாகும்.
மாணவர்களின் உள விருத்தி தொடர்பான இப் பயிற்சி பட்டறைக்கான ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments