சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் கோரைக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் மருத்துவப் பரிசோதனை
(அஸ்ஹர் இப்றாஹிம்)
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட சம்மாந்துறை கோரைக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்கு சுகநல நிகழ்வின் இறுதி பரிசோதனைகள் நடைபெற்றது,
இதன் போது அனைத்து மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர், மேலும் ஆண்டு 6 பெண்பிள்ளைகளுக்கும், ஆண்டு 7 மாணவர்களுக்கும் HPV, aTd தடுப்பு ஊசிகளும் வழங்கப்பட்டன,
நிகழ்வின் இறுதியில் பாடசாலை ஆசிரியர்களுடனான சுகநல விழிப்புணர்வு கலந்தரையாடல் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஐ.எம்.கபீர் மற்றும் டொக்டர் எம்.ஐ.எம்.ஹில்மி ஆகியோர் இணைந்து வினைத்திறனுடன் இந்த நிகழ்வை செயல்படுத்தினார்கள்.
.
நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments