நாட்டைப்பற்றிச் சிந்தித்து நன்றிக்கடனாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிப்பது நமது கடமையாகும். கட்சிக்காக மக்கள் அல்ல. மக்களுக்காகவே கட்சி இருக்க வேண்டும். ரவுப் ஹக்கீம் மக்களை ஏமாற்றுவதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது. இவ்வாறு தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் லொயிட்ஸ் ஆதம்லெப்பை தலைமையில் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் ரணில் விக்ரமசிங்க அவர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்படி (15)கருத்தினைத் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக் கல்லூரிக்கு முன்னாள் இடம்பெற்ற இப்பிரச்சாரக் கூட்டத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தமீம் ஆப்தீன், தேசிய காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர் பாயிஸ் அதிபர் உள்ளிட்ட கூடுதலான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments