அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு!!!
நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் சட்டம், ஒழுங்கை நிலை நாட்டுவதற்காக முப்படையினருக்கு அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நேற்று முன்தினம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினரை அழைப்பதற்கான உத்தரவு அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலே வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது கடமையை பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக முப்படையினரை அழைக்கும் வர்த்தமானி அறிவித்தல் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது
No comments